பாஜகவுடன் கைகோர்த்த ஓபிஎஸ்? டிவிட்டரில் அறிவிப்பு!!

Webdunia
சனி, 20 மே 2017 (12:49 IST)
பாஜகவுடன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓபிஎஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


 
 
பன்னீர்செல்வம், நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பில் அரசியல் சாயமில்லை எனவும், தமிழக நலன் குறித்தே ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார். 
 
தற்போது, ஓபிஎஸ் பிரதமர் உடனான சந்திப்பு பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று அதில் கூறியுள்ளார். 
 
இதன்மூலம் டெல்லி சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்தும் பேசியிருப்பார் என்றே தெரிகிறது. 
அடுத்த கட்டுரையில்