அதிமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நத்தம் விஸ்வநாதன் அதிரடி நீக்கம்

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (15:00 IST)
அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நத்தம் விஸ்வநாதனை அதிரடி நீக்கம் செய்து  தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


 

 
அதிமுக  ஐவர் அணியில் பலம் வாய்ந்தவராக வலம் வந்தவர் நத்தம் விஸ்வநாதன். ஆனால், அவர் மீது பல்வேறு முறைகேடுகள் எழுந்தது. இதனால் அவர் அதிமுகவிலிருந்து ஒரம் கட்டப்பட்டார்.
 
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால்  அவர் தோல்வியை தழுவினார். அதனால், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவி பறிபோனது. அதன்பின் அவருக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அதுவும் பறிக்கப்பட்டுள்ளது.
 
நத்தம் விஸ்வநாதன் வீடு, அலுவலகம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 
 
இந்நிலையில்தான், அவர் அமைப்பு செயலர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
இந்த விவகாரம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்