இனிமேல் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்ய மாட்டேன் : மு.க.ஸ்டாலின் உறுதி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (11:43 IST)
தமிழக சட்டப்பேரவையிலிருந்து இனிமேல், திமுக வெளிநடப்பு செய்யாது என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
மக்கள் தேமுதிக, திமுகவுடன் இணையும் விழா நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது : 
 
“மக்கள் தேமுதிக, திமுகவுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் பற்றி கவலை இல்லை. 
 
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஆளும்கட்சிக்கு ஒரே எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. பேரவையில் திமுக தலைவர் மு.கருணாநிதி பற்றி ஆளும்கட்சியினர் தரக்குறைவாகப் பேசி வருகின்றனர். இதற்கு பதில் அளித்துப் பேச அனுமதி மறுப்பதால், வெளிநடப்பு செய்து வருகிறோம். எனவே, இனிமேல் எதுவாக இருந்தாலும் பிரச்னையைப் பற்றி பேசாமல் வெளிநடப்பு செய்ய மாட்டோம்”
அடுத்த கட்டுரையில்