கருணாநிதியால் ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (17:08 IST)
டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 

கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 7ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் [டிசம்பர் 15ஆம் தேதி] மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், வருகின்ற டிசம்பர் 20ஆம், திமுகவின் பொதுக்குழு கூட்டம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருப்பதால் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்