சுயவிளம்பரம் தேடுகிறது திமுக : விஜயகாந்த் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (09:33 IST)
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசாமல், திமுக சுயவிளம்பரம் தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் மொத்தம் 84 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். பதிவு செய்யாமல் காத்திருக்கும் பட்டதாரிகளும் பல லட்சம் பேர் உள்ளனர்.
 
கடந்த வாரம் சட்டப்பேரவையில் வேலைவாய்ப்பு தொடர்பாக அதிமுக -திமுக இடையே விவாதம் நடந்தாலும், அது ஆக்கப்பூர்வமாக நடைபெறவில்லை.
 
அதிமுகவின் கடந்த ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் தெரியவில்லை.
 
எனவே, இந்த விவகாரத்தில் அதிமுக அரசு கவனம் செலுத்தி, மாவட்டவாரியாக தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சுயவிளம்பரம் தேடும் திமுக: சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையைப் பற்றிப் பேசாமல், தினந்தோறும் ஒரு நிகழ்வை சட்டப்பேரவையில் ஏற்படுத்தியும், போட்டி சட்டப்பேரவை நடத்தியும், சுயவிளம்பரம் தேடிக்கொள்வதில்தான் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது.” 
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.
அடுத்த கட்டுரையில்