தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியம் போல ,மோடி சசிகலா குடும்பம் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராய் தொட்டு தொட்டு அவுட் ஆக்கி வருகிறார். சிபிஐ ,income டாக்ஸ் என்ற நூல்கள் கொண்டு தமிழக தலையாட்டி பொம்மைகளான ஊழல் அமைச்சர்களை திறம்பட நிர்வகித்து வருகிறார்.
மரம் ஏறி தேன் எடுப்பவன் முழக்கையை நக்கதான் செய்வான் ஆனால் இந்த அமைச்சர்கள் நக்கி நக்கி. இப்போது மோடி மஹான் ஊதும் மகுடிக்கு தலையாட்டி வருகிறார்கள். வரலாறு காணாத ஊழல். அந்த விசயத்தில் மஹானுக்கு செலெக்ட்டிவ் அம்னிஷியா. நத்தம் விஸ்வநாதன், ஒபிஎஸ் ரெட்டி காருகள், கரூர் அன்புநாதன் , கண்டைனர் எல்லாம் மோடி மஹான் வசதியாக மறந்து விட்டார். தினகரன் மனித புனிதர் இல்லை தான் அதற்காக ஒபிஎஸ் க்கு மனித புனிதர் பட்டமா ?
ஜெயலலிதா இறந்த பிறகு ஏற்பட்ட கிரகணத்தில், முழு நிலவு ஒன்றை பிளந்து அதை விழுங்க பார்க்கும் வியூக விற்பன்ன பாம்புகள் தான் தமிழக பிஜேபி. எம்ஜிஆர் கண்ட அதிமுக இயக்கத்தின் கடைசி அத்தியாயத்தை மோடி எழுதி வருகிறார்.
மோடியின் கூடத்தில் உதயமான நாயகன் ஒபிஎஸ். உதயமானவர் அல்ல உருவாக்கப்பட்டவர். இவரும் இவர் நண்பர் நத்தமும் என்ன கக்கனும் காமராஜருமா என்ன? தினகரனையும், சசிகலாவையும் விட மிக குறுகிய காலத்தில் அரசியலில் அதிகம் சம்பாதித்தவர்கள் தான் இந்த ஒபிஎஸ்ம் நத்தம். இன்று இவர்கள் மோடியால் ஆசிர்வதிக்கப்பட்டு புனிதம் அடைகிறார்கள்
மோடியின் கள்ள குழந்தை தான் ஒபிஎஸ். தமிழக பிஜேபி-ல் முற்றும் துறந்த முனிவர்களும் இல்லை, அவர்களின் பத்தினி தனத்தை நாடு அறியும். நாளையே பிஜேபி முதல்வர் வேட்பாளராக ஒபிஎஸ் அறிவிக்க பட்டாலோ/ மோடிவுடன் இணைத்து ஒபிஎஸ் போட்டி இட்டாலோ இந்த கள்ள குழந்தை சந்தைக்கு வரும். அது வரை மோடியின் பரமபதம் தொடரும்.
இரா .காஜா பந்தா நவாஸ் , பேராசிரியர் Sumai244@gmail.com