எடப்பாடி பழனிச்சாமி நம்முடைய பேச்சை கேட்பார் என்றுதான் அவரை முதல்வராக்கினோம், ஆனால் அவர் நம் கையை விட்டு போய்விட்டார் என்று சமீபத்தில் சசிகலாவை சந்தித்த தினகரன் புலம்பியதாகவும், இந்த ஆட்சி நடக்கவேண்டும் என்றாலும் கவிழ வேண்டும் என்றாலும் அது தன்னால் தான் நடக்க வேண்டும், அதாவது தமிழக அரசை பொறுத்த வரை ஹீரோவும் நானே வில்லனும் நானே என தினகரன் சபதம் செய்துள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி தன்னுடைய கருத்து எதையும் கேட்காமல் தன்னிச்சையாக ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவு என தெரிவித்தது தினகரனை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து முதல்வர் இனியும் மீறும் பட்சத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் 34 எம்.எல்.ஏ-க்கள் மானியக்கோரிக்கை தீர்மானம் வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தால் தீர்மானம் தோல்வி அடைவதோடு, அன்றோடு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தினகரன் தரப்பினர் எச்சரித்து வருகின்றனர்.