ஆர்.கே. நகர் தேர்தலை அறிவித்த நாள் முதல் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தற்போது இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
எனவே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் மார்ச் 20 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதையடுத்து 21-ம் தேதி பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது 22-ம் தேதி முடிவு செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் ஆஜராக வேண்டும். விசாரணைக்குப் பின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது அன்றிரவே முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் குறிப்பீட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.