சசிகலாவை சந்திக்க பெங்களுக்கு பறந்தோடும் அம்மா அணி எம்.எல்.ஏக்கள்: மீண்டும் குழப்பம்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (06:20 IST)
சசிகலாவை அடுத்து தினகரனும் சிறைக்கு சென்ற பின்னர் இனிமேல்  "சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி செய்வோம்" என்ற முதல்வர் உள்பட சீனியர் அமைச்சர்களே சமீபத்தில் கூறினர். ஆனால் தற்போது தினகரன் ஜாமீனில் வெளிவந்தவுடன் மீண்டும் அதிமுக அம்மா அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



 


"தினகரனை அமைச்சர்கள் சந்திக்க மாட்டோம்" என்று அமைச்சர் ஜெயக்குமாரும், "தினகரன் கட்சிப் பணி தொடர்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார்" என்று அமைச்சர்கள் செங்கோட்டையனும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வந்தனர்.

இதனிடையே 'கட்சிப் பணியை தொடர தினகரனுக்கு உரிமை உள்ளது" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்ததால் அதிமுக அம்மா அணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று சசிகலாவை எம்.எல்.ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன், கதிர்காமு, ஜக்கையன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் சந்திக்க பெங்களூரு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல டி.டி.வி தினகரனும் சசிகலாவை இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்