கருணாநிதி தான் தமிழ் இனத்தின் தலைவர்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (10:02 IST)
அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள 5000 தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி, ஜூலை 8ஆம் தேதியன்று, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் காவல் துறையினருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
 
இந்த போராட்டத்தின் பாதிப்பால் சிக்கியுள்ள தமிழகர்களை காப்பாற்ற கோரி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
 
அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்ற தமிழக பக்தர்கள் 5000 பேர் அங்கு சிக்கித் தவித்து வருவதாக செய்தி வந்துள்ளது. 
 
ஆனால் பாதிப்புக்குள்ளாயிருக்கும் தமிழர்களை பற்றி கவலைப்பட தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா? அந்த அரசு ஏதாவது உருப்படியாகச் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
 
5000 பேர் தவித்துக் கொண்டிருப்பதைப் பற்றித் தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து எந்தச் செய்தியும் இன்றைய ஏடுகளில் காணப்படவில்லை.
 
இனியாவது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாத்து உடனடியாக அவர்கள் தாயகம் திரும்பிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன், என்று கூறியுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்