வனிதாவில் கட்சியில் சேர்க்க பாஜகவுக்கு விருப்பமில்லையா? கஸ்தூரி தகவல்

ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:40 IST)
வனிதாவில் கட்சியில் சேர்க்க பாஜகவுக்கு விருப்பமில்லையா?
சமீபத்தில் தனது மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கஸ்தூரி தனது டுவிட்டரில் அவ்வப்போது டுவிட்டுகளை பதிவு செய்து வருகிறார் 
 
அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்த ட்வீட்டில் வனிதாவின் அடுத்த காதலர் பாஜகதான் என்றும் அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில்  கிடைச்சிருச்சு!!!  ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்
ஏற்கனவே நோட்டாவுக்கு கம்மியா வோட்டு  வாங்குற கட்சி... மேடம் பிரச்சாரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒருவேளை? அடுத்த  வீடியோ பாஜகவுக்கு தான்’ என்று  கூறியுள்ளார்
 
மேலும் சற்று முன்னர் மீண்டும் இது குறித்து அவர் மேலும் ஒரு விடை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: Received a clarification from BJP. About a viral rumor .
பிஜேபி தரப்பிலிருந்து தெளிவுபடுத்தியுள்ளனர். வனிதா மேடம் சேர விருப்பம் தெரிவித்தாராம், கட்சி மேலிடம்  எந்த முடிவும் சொல்லவில்லையாம். அவர்கள் விளக்கத்தை அப்படியே உங்களுக்கு தெரிவித்துவிட்டேன். நன்றி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்