தனியார் விடுதியில் 8 மாதமாக தங்கிய விஜயலட்சுமி… வாடகை பணம் 3 லட்சம் இன்னும் கொடுக்கலையாம்!

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:54 IST)
நடிகை விஜயலட்சுமி தான் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு 3 லட்ச ரூபாய் வாடகை பணம் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த பிரச்சனை காரணமாக விஜயலட்சுமி தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் மீது தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர் புகாரளித்தார். அவருடைய விடுதியில் 8 மாதமாக தங்கி இருந்த விஜயலட்சுமி 3 லட்ச ரூபாய் வாடகைப் பணம் தரவில்லை எனக் கூறி போலிசில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி இப்போது தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்