ஹத்ராஸ் வஞ்கொடுமை வழக்கை விசாரித்து வந்த பெண் அதிகாரி தற்கொலை !

சனி, 24 அக்டோபர் 2020 (23:32 IST)
உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரபப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் பாஜக அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிப்பத்ற்காக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு விசாரணைக் குழுவில் இருந்த புஷ்பா பிரகாஷ் என்ற பெண் அதிகாரி வீட்டில்  இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது கணவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்