கமல்ஹாசன் கட்சி நிர்வாகி சினேகன் கார் விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு !

வெள்ளி, 20 நவம்பர் 2020 (20:15 IST)
சில நாட்களுக்கு முன் பாடலாசிரியர் சினேகன் கார் விபத்தில் சிக்கிய   நபர் இன்று உயிரிழந்தார்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அக்காட்சியின் மாநில இளையரணி செயலாராகப் பொறுப்பு வகித்து வருபவர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராகவும் உள்ளார். இந்நிலையில் அடுத்த வருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
 

இந்நிலையில், இவர் நேற்று இரவு திருமயம் அருகே சவேரியார் பகுதியில் சினேகன் கார் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண்பாண்டி என்பவர் காயமடைந்தார்..இதையடுத்து, அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறீத்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸார் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி சவேரியார்புரத்தில் சினேகன் ஓட்டிச் சென்ற கார்  மோதியதில் காய அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் சினேகனுக்கு மேலும்  சிக்கல் உருவாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்