அந்த முருகன் தான் காப்பாற்றி இருக்கிறார்... ஞானப்பழமான குஷ்பு!!

புதன், 18 நவம்பர் 2020 (13:08 IST)
என் கணவர் வணங்குகின்ற தெய்வம் எங்களை கைவிடவில்லை என விபத்து குறித்து குஷ்பு பேட்டி. 
 
நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நிலையில் இன்று அவர் வேல் யாத்திரையில் கலந்துகொள்ள கடலூருக்கு தனது கார் மூலம் சென்னையில் இருந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது செங்கல்பட்டு அருகே அவரது கார் திடீரென விபத்துக்குள்ளானதை அடுத்து லேசான காயமடைந்த குஷ்பு மாற்று காரின் மூலம் கடலூர் சென்றார். 
 
இந்நிலையில் இது குறித்து அவர்த்ரிவித்துள்ளதாவது, ஒரு கண்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின கண்ணாடி உடைந்திருக்கிறது. எங்களுக்கு எந்த காயமும் இல்லை. 
 
அந்த முருகன்தான் எங்களை காப்பாற்றி இருக்கிறார். என் கணவர் வணங்குகின்ற தெய்வம் எங்களை கைவிடவில்லை, கடவுள் புண்ணியத்தில் நாங்கள் தப்பித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்