எந்த விபத்தும் என்னை நிறுத்த முடியாது: வேல் யாத்திரையை தொடர்ந்த குஷ்பு!

புதன், 18 நவம்பர் 2020 (12:30 IST)
நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நிலையில் இன்று அவர் வேல் யாத்திரையில் கலந்துகொள்ள கடலூருக்கு தனது கார் மூலம் சென்னையில் இருந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது செங்கல்பட்டு அருகே அவரது கார் திடீரென விபத்துக்குள்ளானதை அடுத்து லேசான காயமடைந்த குஷ்பு மாற்று காரின் மூலம் கடலூர் சென்றார்
 
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ’எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் முருகன் அருளால் தான் மாற்று காரில் தற்போது யாத்திரையில் கலந்து கொள்ள சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார் 
 
மேலும் தனது உடல்நலம் குறித்து விசாரித்து அனைவருக்கும் நன்றி என்றும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்த தடை வந்தாலும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்துவேன் என்றும் எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறினார்
 
மேலும் மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்று உள்ளேன் என்றும் கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரையில் குஷ்பு பேசினார். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் என்றும் எது நடந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்