''யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சி இருக்கும்...''. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி

புதன், 18 நவம்பர் 2020 (16:37 IST)
சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியாக அவர் பதிவு செய்தார். ஆனால் இக்கட்சிக்கு தனக்கும் சம்பந்தம் இல்லையென்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். விஜய்யின் அம்மாவும் அக்கட்சியிலிருந்து விலகினார்.

அதன் பிறகு, விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை நீக்கி தனது ஆதரவாளர்களை அவர் நியமித்தார்.

இந்நிலையில் இன்று எஸ்.ஏ.சந்திரசேகரின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.இ.த.வி.ம.இ கட்சி செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாத்துறையில் மூத்த இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வடபழனியில் உள்ள தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நான் எப்போது இருந்ததில்லை எதிர்நீச்சல் போடுவதையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது முதலில் மிரட்டல்கள் வரும் என்பது தெரியும். தற்போது கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிவருகிறார்கள் என்று செய்தியாளரக்ள் எழுப்பிய கேள்விக்கு இதுகுறித்து இரண்டு நாட்களில் பதிலளிப்பதாகத் தெரியுள்ளார்.

இதனால் விஜய்க்கு அவரது தந்தைக்கும் இடையே எழுந்துள்ள கருத்துவேறுபாட்டில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்