ஒரு நிரபராதியின் 30 ஆண்டுகால சிறைவாசம் … அவர் தன் வாழ்க்கைய தொலச்சிட்டு இருக்கார் – நவீன்

வெள்ளி, 20 நவம்பர் 2020 (21:19 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என திரைப்பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் நவீன், 30 வருசம் ஒரு நிரபராதி ஜெயில்ல தன் வாழ்க்கைய தொலச்சிட்டு இருக்கார். அவர் ரிலீசாக இன்னைக்கு ஒரு நாள் குரல் கொடுப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் எந்த இடையூறும் இல்லை என உச்சநீதிமன்ற கூறிய பிறகும் ஆளுனர் இது தொடர்பான ஒப்புதல் வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் கட்சிகள் அவரை விடுதலை செய்ய ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சினிமா நடிகர்கள் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் பல ஆண்டு காலமாக நீதிக்காக காத்திருக்கும் அவரை இனியும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஆளுனரிடம் தமிழக முதல்வர் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

ஒரு நிரபராதியின் 30 ஆண்டுகால சிறைவாசம் ஒரு தாயின் கால் நூற்றாண்டு போராட்டம் நீதிக்காக பாடல் வழியே இளைஞர்களின் குரல். #ReleasePerarivalan எனப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், ‘’எத்தனை நீண்ட பிரிவின் பெரும் துயரம் போதும். நிரந்தரமாக அந்த தாயிடம் அந்த மகனை கொடுத்துவிடுங்கள்

@CMOTamilNaduஐயா @ArputhamAmmal#ReleasePerarivalan எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்