ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்‌ஷரா ஹாசன் – அக்னிசிறகுகள் படக்குழு அதிரடி முடிவு!

புதன், 28 அக்டோபர் 2020 (10:44 IST)
நடிகை ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்‌ஷரா ஹாசனை நடிக்க வைத்துள்ளனர் அக்னி சிறகுகள் படக்குழுவினர்.

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசனை புக் செய்து படத்தை இயக்கி வருகிறாராம் நவீன்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்