இறுதிகட்ட படப்பிடிப்பில் அக்னி சிறகுகள்… இயக்குனர் நவீன் பகிர்ந்த புகைப்படம்!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (18:04 IST)
இயக்குனர் நவீன் இயக்கும் புதிய படமான அக்னி சிறகுகள் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசனை புக் செய்து படத்தை இயக்கி வருகிறாராம் நவீன்.

இதையடுத்து இப்போது கொல்கத்தாவில் படப்பிடிப்பை நடத்திவரும் நவீன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்