விஜய் ஆண்டனியின் 14வது படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 12 நவம்பர் 2020 (12:58 IST)
கோலிவுட் திரையுலகின் நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஏற்கனவே ’அக்னி சிறகுகள்’, தமிழரசன், காக்கி மற்றும் ,பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது
 
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தின் நாயகியாக ஆத்மிகா நடிக்கவுள்ளார். இவர் ஹிப்ஹாப் தமிழா நடித்த ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்தவர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விஜய் ஆண்டனியின் 14வது படமான இந்த திரைப்படத்துக்கு ’அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் நாளை காலை 10 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்