பயிற்சிக்கு வர முடியாது: உசேன் போல்ட் சாதனையை தகர்த்த இளைஞர் அதிரடி

திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:51 IST)
பெங்களூரில் சமீபத்தில் நடந்த பாரம்பரிய எருமை போட்டியான கம்பாலா என்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியில் உசேன் போல்ட்டை விட மிக வேகமாக ஓடி சாதனை செய்தவர் சீனிவாச கவுடா. கட்டடத் தொழிலாளியாக வேலை பார்க்கும் இவ்வாறு 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் ஓடி சாதனை செய்தார் என்பதும் உசேன் போல்ட்டை விட 0.03 வினாடிகள் வேகமாக இவர் ஓடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இது குறித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது
 
இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ என்பவர் இதுகுறித்து கூறிய போது சீனிவாச கவுடாவை ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு அத்தாரிட்டியில் பயிற்சியில் சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இதற்காக அவருக்கு பெங்களூர் செல்ல டிக்கெட் எடுத்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
 
ஆனால் சீனிவாச கவுடா பெங்களூருக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியபோது ’ஓட்டப்பந்தயம் வேறு கம்பாலாவில் ஓடுவது வேறு. எனக்கு இந்தப் போட்டி தான் பிடித்துள்ளது. நான் எந்த பயிற்சியிலும் பங்கேற்கப் போவதில்லை. தொடர்ச்சியாக மார்ச் 10ஆம் தேதி வரை பல போட்டிகளில் நான் பிஸியாக இருப்பேன். இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்பதால் இதனை தவிர்த்து விட்டு பயிற்சிக்கு என்னால் செல்ல முடியாது. எனவே நான் அமைச்சரின் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தெரிவித்தார் 
 
இது குறித்து அமைச்சர் கிரிராஜ் கூறியது போது ’பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஓடுவது வேறு ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஓடுவது வேறு என்பது உண்மைதான். அவர் விருப்பப்பட்டால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அவருக்கு விருப்பம் இருந்தால் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்
 
ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தட்டிக்கழித்து பாரம்பரிய விளையாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட இருப்பதாக சீனிவாச கவுடா கூறியிருப்பதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்