இனி அனுமதியின்றி ஜல்லிகட்டு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை

ஞாயிறு, 21 ஜூலை 2019 (10:46 IST)
சிவகங்கையில் இனி அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், அனுமதியின்றி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மேலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கூறிவந்த நிலையில், தற்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்,

”கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல், மாநில அளவில் எவ்வித ஜல்லிக்கட்டுகளும் நடைபெற அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மே மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி சிலர் மஞ்சுவிரட்டு விழாவை நடத்து வருகின்றனர். எனவே இனி அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஆகிய விழாக்களை நடத்துபவர்களுக்கு காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டு  உள்ளது. மேலும் மாவட்ட பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்