சிறுக சிறுக திருடி வாங்கிய வீடு: சிக்கிய மாடல் அழகி! – மும்பையில் அதிர்ச்சி!

திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:58 IST)
மும்பையில் மாடல் அழகி ஒருவர் பயணிகள் ரயிலில் திருடி அதன் மூலம் வீட்டையே விலைக்கு வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் துறைமுகம் வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களில் பெண்களின் கைப்பைகள் மற்றும் ஆபரணங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து போலீஸாருக்கு புகார்கள் குவிந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீஸார் புர்கா அணிந்த பெண் ஒருவர் திருட்டில் ஈடுபடுவதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த பகுதியில் ரகசியமாக காத்திருந்த போலீஸார் புர்கா அணிந்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் யாஷ்மின் என தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் நடன அழகியாக பணிபுரிந்த யாஷ்மின் அந்த பார் இழுத்து மூடப்பட்டதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட அவர் அந்த பணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசதியான அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்க முன்பதிவும் செய்துள்ளார். அவரிடமிருந்து 8 லட்ச ரூபாய் ரொக்கம், திருடப்பட்ட நகைகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்