உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 2.91 கோடி, குணமடைந்தோர் 2.01 கோடி!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (08:16 IST)
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802  பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பேர்கள் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,708,458 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 198,520என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,974,949 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,845,003 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 79,754 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,777,044 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,330,455 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 131,663 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,573,958 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யா, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் உள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்