21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... பின்பற்ற வேண்டியவை என்னென்ன??

திங்கள், 14 செப்டம்பர் 2020 (08:02 IST)
வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வர 21 ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியமான ஒன்றாகும். 
 
இந்நிலையில் வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை, 
1. நாற்காலிகள் மற்றும் மேசைகள் 6 அடி இடைவெளியுடன் அமைக்கப்பட வேண்டும். 
 
2. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இடையே தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் கிருமிநாசினி பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். 
 
3. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 
 
4. மடிக்கணிணி, நோட்டு புத்தகங்கள் போன்ற்வற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 
 
5. மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் கதவுகள், நாற்காலிகள், பெஞ்சுகள், கழிப்பறை மற்றும் மாடிப்படிகளின் கைப்பிடிகளை அடிக்கடி கிருமி நீக்கம் செய்ய வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்