தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர் திரவியம். இவர் செல்பி மோகம் கொண்டவர் என சொல்லப்படுகிறது. எங்காவது வெளியே சென்றால் கூட அவர் செல்பி எடுத்து வைத்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கையில் தனது உறவினர் விவசாய தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் காலையில் வேலைக்கு செல்வதற்கு முன்னர் தூக்கு மாட்டிக்கொள்வது போல அவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அப்போது அவர் கால் தவறியாதாலோ என்னவோ தூக்குக் கயிறு இறுகியுள்ளது. கயிற்றில் இருந்து மீள நீண்ட நேரமாக போராடியும் அவரால் வெளியே வரமுடியவில்லை. அதனால் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.