உலக கொரோனா பாதிப்பு 2.8கோடி, ஆனால் குணமடைந்தோர் 2.08 கோடி:

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (07:34 IST)
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.89 கோடியாக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.08 கோடி பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 பேர்கள் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,676,601 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 198,128 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,950,354 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,751,788 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 78,614 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,699,298 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,315,858 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 131,274 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,553,421 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யா, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் உள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்