2,271 லிட்டர் தாய் பாலை தானமாக வழங்கிய அமெரிக்க பெண்!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (20:15 IST)
அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் இதுவரை 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார். 


 
 
வழக்கமாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலைவிட 10 மடங்கு அதிகமான பால் இவருக்கு சுரக்கிறது. இவருக்கு ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது. 
 
தினமும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார். பின்னர், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகப் பாலை வழங்கி வருகிறார்.
அடுத்த கட்டுரையில்