சார்ஜ் போட்டு கொண்டே செல்போனில் கேம் விளையாடிய பெண் பலி!

Webdunia
புதன், 12 மே 2021 (07:23 IST)
சார்ஜ் போட்டு கொண்டே செல்போனில் கேம் விளையாடிய பெண் பலி!
செல்போன்கள் சார்ஜ் போட்டுக்கொண்டிருக்கும்போது உபயோகப்படுத்த கூடாது என ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பெண் ஒருவர் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாய்லாந்தை சேர்ந்த 54 வயது பெண்ணின் கணவர் புது செல்போனை தனது மனைவிக்காக ஆசை ஆசையாய் வாங்கி கொடுத்தார். அந்த செல்போனில் அந்தப் பெண் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் நேற்று செல்போனில் சார்ஜ் இல்லாததை அடுத்து சார்ஜ் போட்டுக்கொண்டு ஆன்லைன் கேம் விளையாடினார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
செல்போன் சார்ஜ் போட்டு கொண்டிருக்கும் செல்போனை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே பலமுறை செல்போன் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்