குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்…!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:30 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் ஹம்ப்ரெ என்ற பெண் குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்து தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதையடுத்து பல பெற்றோர்களும் இவரிடம் தங்கள் குழந்தைகளுக்கு அழகாகவும், பொருத்தமாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் பெயரை பரிந்துரைக்க சொல்லி வேண்டுகோள் வைத்து வருகின்றனர். அவர்களுக்கு பிடித்தமான பெயரை இவர் தேர்வு செய்து வருகிறார். அதற்காக அவர்களிடம் சுமார் ஒரு லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துகொள்கிறார். கடந்த ஆண்டு மட்டும் இவர் இதுபோல 1500 குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்து தந்துள்ளார். கட்டணத்துக்கு ஏற்றவாறு பல திட்டங்களை இதற்காக பெற்றோர்களுக்கு பரிந்துரை செய்தும் வருகிறார். நியுயார்க்கை சேர்ந்த இவருக்கு இப்போது இணையத்தில் செம்ம வரவேற்புக் கிடைத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்