அப்போது தனது கணவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது அவருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரை எழுப்பி சண்டை போட்டார். அவருடைய கூச்சல் காரணமாக மற்ற பயணிகளின் தூக்கத்திற்கு இடைஞ்சல் ஆனது.
இதுகுறித்து சமாதானம் செய்ய வந்த விமான அதிகாரிகளையும் அந்த பெண் திட்டியதோடு, உடனே விமானத்தை தரையிறக்குமாறும் சண்டை போட்டார். மற்ற பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விமானத்தை இறக்க விமான அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்ததால் சென்னை விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சென்னையில் தரையிறக்கப்பட்டது,. பின்னர் கணவன், மனைவி இருவரையும் இறக்கிவிடப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் கிளம்பியது.