89 நாடுகளில் ஒமிக்ரான் - இரட்டிப்பு வேகத்தில் பரவும் சோகம்!

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (09:04 IST)
உலகம் முழுவதும் உள்ள 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், டெல்டா வகையை விட ஒமிக்ரான் வைரஸ் இரு மடங்காக அதிகமாக பரவுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதோடு மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் ஒமிக்ரான் வைரஸ் இருமடங்காக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்