பாதிப்பு குறைஞ்சாலும் கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை உலக நாடுகள் குறைக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள், சுகாதார செயல்பாடுகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “உலகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக எடுத்த கட்டுப்பாடுகளும், சுகாதார வழிமுறைகளுமே இதற்கு காரணம். அதேசமயம் கொரோனா குறைவதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி விட கூடாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்