தற்கொலை செய்துக்கொண்ட திமிங்கலங்கள்: உலக அழிவிற்கான எச்சரிக்கை!!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (15:44 IST)
நியூசிலாந்து நாட்டில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நியூசிலாந்து நாட்டில் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்திய கடற்கரையில் 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியது.
 
அவற்றில் பல திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன. இன்னும் சில கரை ஒதுங்கிய உடனே, உயிரை விட்டன. இதுவரையில் 416 திமிங்கலங்கள்  சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளன.
 
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என நியூசிலாந்து கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். கரை ஒதுங்கிய  திமிங்கலங்கள் அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்களாகும். 
 
இதற்கான உண்மைக் காரணம் ஏதேனும் பெரிய அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்றும், இது உலக அழிவிற்கும் மனித குலத்திற்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும் கருதுகிறனர்.
அடுத்த கட்டுரையில்