இதுக்கெல்லாம் தூக்கு தண்டனையா? ஈரானில் பளு தூக்கும் வீரருக்கு நேரும் கொடுமை!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:16 IST)
கொரோனாவால் ஈரானில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அரசின் முடிவை விமர்சித்த பளு தூக்கும் வீரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

ஈரானில் கொரோனா ஊரடங்குக்கு பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் மத வழிபாட்டு தளங்களுக்கு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த அந்நாட்டின் பளு தூக்கும் வீரர் ரேஸா தப்ரிஸி, ‘புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஜிம்முக்கு செல்லக் கூடாது என்பது வேடிக்கையானது’ எனத் தெரிவித்தார்.

இது மத உணர்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்த அவரைக் கைது செய்தது காவல்துறை. தன் பேச்சுக்கு தப்ரிஸி மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக அவருக்கு தூக்கு தண்டனை கூட கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்