ரஷ்ய தளபதியை நாங்கதான் கொன்றோம்.. ஒத்துக் கொண்ட உக்ரைன்! - பதிலடிக்கு தயாராகும் ரஷ்யா?

Prasanth Karthick
புதன், 18 டிசம்பர் 2024 (09:55 IST)

ரஷ்ய ராணுவ படைத்தலைவர் இகோர் க்ரில்லோவ் கொல்லப்பட்ட சம்பவத்தில் உக்ரைன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையே போர் வலுப்பெறும் சூழல் உண்டாகியுள்ளது.

 

 

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரசாயன, கதிர்வீச்சு பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்கி வருகிறார் இகோர் க்ரில்லோவ். இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது கட்டடத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் வெடித்து சிதறியதில் பலியானார். அவரது உதவியாளரும் உடன் பலியானார். 

 

சமீபத்தில் உக்ரைன் மீது தடைசெய்யப்பட்ட ரசாயன கதிர்வீச்சு ஆயுதங்களை பயன்படுத்தியதாக க்ரில்லோவ் மீது உக்ரைன் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் அவர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதால் இதில் உக்ரைனுக்கு தொடர்பிருக்கலாம் என கருதப்பட்டது.
 

ALSO READ: புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலைக் கவலைக்கிடம்..!
 

இந்நிலையில் க்ரில்லோவ் கொலை செய்யப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. இதனால் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் இந்த செயலுக்கு பதிலடி கொடுப்போம் என ரஷ்யா தெரிவித்துள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்