கரியமில வாயுவை குறைக்க என்ன நடவடிக்கை?! – அமெரிக்கா உச்சி மாநாட்டில் சீனா பங்கேற்பு!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (09:44 IST)
உலகம் முழுவதும் கரியமில வாயு அதிகரிப்பால் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்துவது குறித்த உச்சி மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ள உள்ளார்.

உலகம் முழுவதும் கரியமிலவாயு பயன்பாடு அதிகரிப்பால் பருவநிலை மாற்ற பிரச்சினைகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. இதுகுறித்து முன்னதாக பல மாநாடுகள் நடந்த நிலையில் 2015 பாரிஸ் ஒப்பந்தம் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கரியமில வாயு பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்நிலையில் கரியமில வாயுவை குறைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வல்லரசு நாடுகளின் நிதியுதவி குறித்து அமெரிக்காவில் உலக நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உலக அளவில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்தும் நாடுகளாக உள்ள அமெரிக்கா மற்றும் சீனா இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள நிலையில் சீன அதிபர் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையேயும் சமீப காலமாக மோதல் இருந்து வரும் நிலையில் இந்த மாநாட்டில் ஒரே முடிவை இரு நாடுகளும் ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்