அமெரிக்க அதிபர் டிரம்ப் ’பலத்த அடி ’வாங்கப்போகிறார் - ஜோ பிடென்

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (16:39 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் தோல்வி அடையப் போகிறார் என வரும்  அதிபர் தேர்தலில் போட்டிவுள்ள ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு எல்லாம் நாட்டாமையாக உள்ள நாடு அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் டொனால்ட் டிரம்ப். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வரும் 2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ளது.
 
வரும் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் டிரம்புக்கு எதிராக ஜோ பிடென் போட்டியிடவுள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இவரது மகன் உக்ரைனின் பணியாற்றிய போது, எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கும் படி  உத்தரவிட்டதாகவும் டிரம்ப் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த புதன் இரவு, ஜோ பிடென், ரெனோ நகரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது : டிரம்பும் எங்கும் செல்ல மாட்டார். அதனால் அவரது குடும்பமும் அழியப் போவதில்லை என்று தெரிவித்தார்.

மேலும்  டிரம்ப் பலவீனமானவராகவும், தோல்விக்கு பயந்தவராகவும் உள்ளார். அடுத்து வரும் அதிபர் தேர்தலில் டிரம்ப் பலத்த அடியாக தோல்லி அடைவார் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடந்துவரும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்