அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அரசு அதிரடியாக சற்று முன்னர் பயங்கர சக்தி வாய்ந்து வெடிகுண்டுகளின் உதவியுடன் ஆப்கன் நாட்டில் தாக்குதல் நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து தங்கி, மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த பகுதியில் பயங்கர சக்தி வாய்ந்த அதாவது 21,000 பவுண்ட் எடையுள்ள வெடிகுண்டுகளை அமெரிக்கா வீசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதி பாகிஸ்தானை ஒட்டிய இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு நண்பனாக, பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் மீதான பாதிப்பு இந்தியாவையும் பாதிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.