அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்ற நிலையில் ட்ரம்ப்பால் பதவியமர்த்தப்பட்ட கொரோனா ஆலோசகர் ஸ்காட் அட்லாஸ் பதவி விலகியுள்ளார்.
உலகிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டவர் ஸ்காட் அட்லாஸ். ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் நரம்பியல் நிபுணராக இருந்த ஸ்காட் கொரோனா குறித்த அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகளை தவறாக வழிநடத்தியதாக பலர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் ஸ்காட் கொரோனாவுக்கு மாஸ்க் அணிய அவசியமில்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஜோ பிடன் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் புதிய கொரோனா மருத்துவ ஆலோசனை குழுவை அமைத்துள்ளார். இதனால் தானாக பதவி விலகியுள்ள ஸ்காட் அட்லாஸ் புதிய மருத்துவ குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.