’பாவம்’ - அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கு வந்த சோகம்! வீடியோ

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (13:15 IST)
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்க இருக்கிறது. 


 
 
இதில், அதிபர் பதவிக்கு போட்டியில் இருக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர், ஹிலாரி கிளிண்டன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலில், உயரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நியூயார்க் வந்த ஹிலாரி கிளிண்டனுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. 
 
இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ”அவருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும், அதன் காரணமாக நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், அவரை நன்றாக ஓய்வு எடுக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. 
 
தற்போது அவர் நியூயார்க்கில் உள்ள தனது மகள் செல்சியாவின் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்