இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட ஒருசில நாடுகளில் டிக்டாக்கில் தடை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சமீபத்தில் டிக் டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யாவிட்டால் அந்த செயலியை நாடு முழுவதும் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்த அவகாச கெடு காலமும் நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது