கமலா ஹாரிஸ் பேசிய ஒரே ஒரு தமிழ் வார்த்தை: கூகுளில் ஏற்பட்ட பரபரப்பு

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (13:38 IST)
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கமலாஹாரிஸ் உறவினர்கள் சென்னையில் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் அதிபர் வேட்பாளரான ஜோபிடன் தனது முதல் உரையை அமெரிக்காவில் நேற்று தொடங்கினார். அப்போது பேசிய துணை அதிபர் வேட்பாளரான கமலாஹாரிஸ், ’சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார் 
 
அமெரிக்கர்களுக்கு இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை என்பதால் உடனடியாக அவர்கள் கூகுளில் சித்தி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தேடி வருகின்றனர். ஒரே நாளில் கூகுளில் ஏராளமான நபர்கள் ‘சித்தி’ என்ற வார்த்தையை தேடி வந்ததால் கூகுளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கமலா ஹாரீஸின் சித்தி சென்னையில் இருக்கிறார் என்பதும் ’கமலா ஹாரிஸ் நான் எப்போது பார்க்க வேண்டும் என்று விரும்பினாலும் உடனே அவர் சென்னைக்கு வந்து விடுவார் என்று அவரது சித்தி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்