பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்...

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (16:25 IST)
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டை பகுதியில் வசிப்பவர் பெரோனா (40)என்பவர் 
ஆழப்புழாவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைசெய்து வந்துள்ளார்.

ஏற்கனவே தன் கழுத்தில்  தாலிகட்டிய கட்டிய கணவனைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
 
இந்நிலையில் பெரோனாவுக்கும் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மணவனுக்கும்  பழக்கம் உருவாகியுள்ளது.
 
அந்த மாணவனின் பேச்சும் நடத்தையும் ஆசிரியரை கவர்ந்து இழுத்திருக்கிறது . எனவே அவனது அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டவர் இருவரும் செல்போன் வாயிலாகவே தொடர்பு பேசிவந்துள்ளனர்.
 
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அந்த மாணவனை காணவில்லை என அவனது பெற்றோர் போலீஸ் ஸ்டேசனில் பூகார் அளித்துள்ளனர்.
 
அதனை ஏற்றுக் கொண்ட போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆசிரியரும் மாணவனும் காணாமல் போயிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
 
இந்த நிலையில் மாணவனுடன் அந்த  ஆசிரியை சென்னையில் ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்த போலீஸார் மாணவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 
இதுகுறித்து கடத்தி சென்ற ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்