காபூல் குண்டுவெடிப்புக்கு காரணம் என்ன? தாலிபன்கள் பதில்

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (09:42 IST)
காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என தாலிபன்கள் கருத்து. 
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த குண்டு வெடிப்பு குறித்து தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் தெரிவித்துள்ளதாவது, காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம். இது குறித்து அமெரிக்காவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தோம். 
 
வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறிவிட்டால் அதன் பிறகு காபூலில் ஒரு குண்டு கூட வெடிக்காது. ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் (தாலிபன்கள்) எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்