ஊடகங்களில் பணி செய்த அனைத்து பெண்களும் பணிநீக்கம்: வேலையை காட்டிய தாலிபான்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (07:59 IST)
ஊடகங்களில் பணி செய்த அனைத்து பெண்களும் பணிநீக்கம்
ஊடகங்களில் பணி செய்த அனைத்து பெண்களும் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் இனி ஊடகங்களில் பெண்கள் பணிபுரிய அனுமதி இல்லை என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் தாலிபான்கள் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் படிக்கலாம் வேலைக்கு போகலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் கூறி வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அரசு ஊடகங்களில் வேலை செய்த பெண்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
ஆப்கானிஸ்தான் அரசு ஊடகங்களில் பணிபுரிந்த செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தாலிபான்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவர் கூறும்போது நான் என் அடையாள அட்டையை காட்டிய பிறகும் என்னை அலுவலத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டார்கள் என்றும் இனி பெண்கள் செய்தி வாசிப்பாளர்கள் ஆக பணிபுரிய முடியாது என்று கூறி எங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் கண்ணீருடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்