எஸ்.வி. வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும்- அமெரிக்க அரசு உறுதி

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (16:21 IST)
அமெரிக்க நாட்டிலுள்ள முக்கிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அந்த வங்கியை மூட உத்தரவிடப்பட்டுள்ள  நிலையில் 'சிலிக்கான் வேலி வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைவருக்கும் பணம் திருப்பித்தரப்படும்' என்று அமெரிக்க அரசு உறுதியளித்துள்ளது.
 
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டிலுள்ள சிலிக்கான் வேலி என்ற வங்கி மிகவும் பிரபலமானது மற்றும் பெரியது.

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் பணத்தை அதிகளவில் எடுத்ததால், அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சிலிக்கான் வேலை வங்கியை மூட கலிபோர்னியா நிதி பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடந்த 18 மாதங்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்த்தப்பட்டுள்ளதல், பல நிறுவங்கள் இதுபோல் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தாக்கத்தால் சிலிகான் வேலி வங்கியின் தாய் நிறுவனமான எஸ்.வி.பி பைனான்சியல் குழுமத்தின் பங்குகள், நியூயார்க் பந்துச் சந்தையில் இன்று 70% அளவு சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்குப் பணம் திருப்பித் தரப்படும் என்று அமெரிக்க அரசு உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து, இன்று அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெப்பன், 'அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதால், எஸ்.வி.பி வங்கி எதிர்பாராரா விதமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி   நெருக்கடிக்கு உள்ளான நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் எல்லோரும் ரூ.3,44,012 கோடி டெபாசிட்  பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை எடுத்ததால், வங்கி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

எனவே, கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு  இயங்கும் சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட் செய்துள்ள அனைவருக்கும் பணம் திருப்பித்தரப்படும் என்று அமெரிக்க அரசு உறுதியளித்துள்ளதாகக்' கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்