காசாவில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.
87 வயதான போப் பிரான்சிஸ், கடந்த புதன்கிழமை ரோம் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் தினந்தோரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ஆயிரக்ணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது, அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது என கூறியுள்ளார்.
போரால் சிறப்பான உலகை கட்டமைக்க முடியும் என நினைக்கின்றீர்களா? உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நினைக்கின்றீர்களா? போப் பிரான்சிஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.