ஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகுமென உங்களுக்கு தெரியுமா???

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:23 IST)
ஏஞ்சலோ கசிமிரோ என்ற 15 வயது சிறுவன் தன் கற்பனை மற்றும் விடா முயற்சியின் மூலம் காலணி எனப்படும் ஷூ அணிந்து நடந்தால் போன் சார்ஜ் ஆகும் என கண்டு பிடித்துள்ளார். 


 
 
பைஸே எலெக்ட்ரிசிட்டி (Piezo electricity) பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஷூ ஒவ்வொரு முறை அழுத்தம் கொடுக்கும் போதும் மின்னழுத்த மாற்று உருவாகின்றது. 
 
சிறுவனின் கண்டுபிடிப்பு மூலம் மனிதர்கள் நடக்கும் போதே தங்களது செல் போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடியும். உடலில் இணைக்கப்பட்ட சிறிய கருவி இலவசமாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கும். ஒவ்வொரு முறை அடியெடுத்து வைக்கும் போதும் இந்தக் கருவியில் மின்சாரம் சேமிக்கப்படும்.
 
ஓபன் சோர்ஸ் முறையில் தனது கண்டுபிடிப்பினை வழங்கியிருக்கும் ஏஞ்சலோ இதன் மூலம் இந்தக் கருவியினை மேம்படுத்தும் உரிமையை விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார். எனினும் இந்தக் கருவி அதிகளவு தயாரிப்பதற்கு இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்